ஆரம்ப பிரிவுகளை திங்கள்முதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள், கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் இரண்டாம் கட்டமாக, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, 200 இற்கும் அதிக மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் இன்றும், நாளையும் பாடசாலைகளுக்கு சென்று, சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2018இல் உலகப் பொருளாதார மாநாடு இலங்கையில்!
பழங்களுடன் தொடர்புடைய உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி -...
இன்று விசேட கலந்துரையாடல் - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|