ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளது. எனவே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் ஜூன் 03 ஆம் திகதியிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Related posts:
இந்திய நிதியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி - அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!
சமூக வலைத்தளங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவ...
யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈ.பிடி.பியின் மாநகர உறுப்பினர் அ...
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம் - ஜனாதிபதி ஆணையகத்திடம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ...