ஆயுள்வேத நிறுவனங்களை பதிவு செய்யப்படல் கட்டாயம்!

Tuesday, December 18th, 2018

சுதேச மருத்துவ நிறுவனங்கள், ஆயுள்வேத மருந்துசாலைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் இயற்கை அழகு நிலையங்கள் என்பன இலங்கை ஆயுள்வேத திணைக்களத்தில் பதியப்பட்டு ஆயுள்வேத ஆணையாளரது அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் மேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இலங்கையின் சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக இந்த நிறுவனங்கள் ஆயுர்வேத திணைக்களத்தினது அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினது அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.

Related posts: