ஆயுள்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Thursday, January 26th, 2017

நாட்டில் ஆயுள்வேத வைத்தியர்களுடன் கூடிய ஆயுள்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆயுள்வேத வைத்தியர்களை நிர்வாகத்தில் இணைத்துக் கொள்வது இதன் நோக்கமாகும் என்று மருத்துவ திருத்தச் சட்டமூல விவாத்தில் இன்று பாராளுமன்றத்தில் கலந்துகொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சுகாதார திணைக்களத்தைப் போன்று ஆயுள்வேத திணைக்களமும் முறையாக முன்னெடுக்கப்படவிருக்கிறது. இலங்கை மருத்துவப் பேரவையை போன்று ஆயுள்வேத மருத்துவப் பேரவையும் அமைக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பல் மருத்துவ சேவையில் முறையான விதத்தில் முன்னெடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று விவாதத்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் பைசல் காஸிம் கூறினார். இதன் மூலம் பல் வைத்தியர்களுக்கும், நோயாளர்களுக்கும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

20150404163333_raji

Related posts: