ஆயுத கடத்தல் – புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு!

Thursday, October 14th, 2021

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலானாய்வு முகமை இலங்கை அரசின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: