ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் இலவசக் கல்வி வரலாற்றின் மைல்கல் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு!

ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம், இலவசக் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக வரலாற்றில் இடம்பெறும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இது, அறிவுசார் கல்விக்கான ஒரு புரட்சியின் ஆரம்பம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே தற்போது இலங்கையானது, கல்வியில் தேசிய அபிலாஷைகளை நோக்கி நகர்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான ஒதுக்கீட்டை 4.5% சதவீத்திலிருந்து 7.2% சதவீதம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்தளவு வசதிகள் இருந்தும், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மொனராகலை மாவட்டமானது கல்வியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கையும் இதற்குக் காரணமாக இருந்ததென்றும் ஷசீந்திர ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சவால்கள் இருந்த போதிலும், கல்விக்கான அர்ப்பணிப்பையும் செலவினத்தையும் விட்டுக்கொடுக்காமல் கல்விக்கு உயிர் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இது, வளப் பகிர்வில் உள்ள முரண்பாடுகளினால் கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிராமப்புறங்களில் கவனத்திற்கொள்ளப்படாத பாடசாலைக் கட்டமைப்பை உயிர்ப்பித்து, பிள்ளைகளின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும் எனவு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|