ஆப்கானிஸ்தானின் பிரதிநிதி விவகாரம் – சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு இரத்து!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு பக்க அமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவிருந்த இந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டமைக்கு, பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட யோசனையே காரணமாகும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தானின் பிரதிநிதி ஒருவரும் பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் யோசனை முன்வைத்துள்ளது.
எவ்வாறிருப்பினும், இணக்கமில்லாத காரணத்தினால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கான ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அது வெற்றிடமாக இருக்க வேண்டும் என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
சார்க் அமைப்பில், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான 8 நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
தலிபான்களை ஆப்கானிஸ்தானின் சட்டபூர்வமான அரசாங்கமாக இந்தியா இதுவரையில் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|