ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி!

Sunday, April 18th, 2021

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சில நிறுவனங்களின் தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  அஃப்ளாடொக்சின் இரசாயனம் அடங்கியுள்ளதாக அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து 105 மெற்றிக் டன் அளவிலான தேங்காய் எண்ணெய் அண்மையில் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்துஇ ஏனைய இரண்டு நிறுவனங்களின் தரமற்ற தேங்காய் எண்ணெய் கொள்கலன்களும் தொடர்ந்தும் சுங்கப்பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அவற்றையும் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: