ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது தேயிலை தொழிற்துறை –  அமைச்சர் நவீன் திசாநாயக்க 

Saturday, July 29th, 2017

க்ளைபேசெட் தடை காரணமாக தேயிலை தொழிற்துறை கடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இரசாயன மருந்துக்கான தடைக்காரணமாக தேயிலை தொழிற்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து நிபுணர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

150 வருட கால பழமை வாய்ந்த இந்த தேயிலைதுறைக்கு பாதிப்பு ஏற்படும் போது அமைச்சர் என்ற வகையில் அது தொடர்பில் பேச வேண்டியது தமது பொறுப்பாகும்

க்ளைபேசெட்டினால் ஏற்படும் உடற்பாதிப்பு குறித்து தெளிவாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றால் அதனை தொடர்ந்தும் சில காலத்திற்கு விநியோகிக்கும் படி கோருவதாக அவர் கூறியுள்ளார்

க்ளைபேசெட் தடை செய்யப்பட்டாலும் இந்தியாவின் ஊடாக புத்தளம் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தடைசெய்யப்பட்ட க்ளைபேசெட் மருந்தை தேயிலைத்துறையில் பயன்படுத்த பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: