ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு சுற்றறிக்கை !

கொரோனா ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளதாக என பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
பல்கலைக்கழகங்களை மே 11 திகதி மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும், கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பின் காரணமாக இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள் ஆய்வு நோக்கங்களுக்காக 10% அல்லது 20% கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் மட்டுமே திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுநேரம் க.பொ.த உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அமைச்சர் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் தீர்மானத்திலும் இதுவரை மாற்றமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|