ஆபத்தான நிலையில் வீரவங்ச! 

Wednesday, March 29th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் நிலை மோசமடைந்துள்ளமையால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விமல் வீரவங்ச, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70இற்கும் மேற்பட்ட நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் இது பிணை கோரிய உண்ணாவிரத போராட்டம் அல்ல என விமலின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் விமலை பார்வையிடுவதற்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில போன்றோரும் இது பிணைக்கான போராட்டம் அல்ல என தெரிவித்திருந்தனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: