ஆபத்தான நிலையில் பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பாலம் – நேரில் சென்று பார்வையிட்டார் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர்!

Thursday, June 29th, 2023

ஆபத்தான நிலையில் காணப்படும் பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பாலம் நேரில் சென்று பார்வையிடப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர்

போக்குவரத்திற்கு ஆபத்தான நிலையில் காணப்படும் பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பாலத்தினை  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் இரத்தினம் அமீன் நேரில் சென்று பார்வையிடப்பட்டார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்கு கிராம மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பாலத்தை நேரில் சென்று பார்வையிடப்பட்டார்.

பாரதிபுரம், மலையாளபுரம் மக்களின் போக்குவரத்துக்கு பிரதான மார்க்கமாக இந்த வீதி காணப்படுவதுடன் மழைகாலங்களில் மக்கள் எதிநோக்கும் வெள்ளப் பாதிப்பை தவிர்க்கும் நோக்கில் இப்பாலம் கரைச்சி பிரதேச சபையினரால் அமைக்கப்பட்ட போதும் பாலத்தின் ஊடாக வெள்ள நீர் செல்வதற்கான  இடைவெளி போதாமை மற்றும் பாலத்தை சுற்றியுள்ள பகுதிகள் முறையாக அமைக்கப்படாத காரணத்தினால் பாலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: