ஆபத்தான நாட்டுப் பட்டியலில் இலங்கை முன்னிலை!

Thursday, July 19th, 2018

உலக காலநிலை மாற்றம் தொடர்பான அவதான சுட்டெண்ணில் இலங்கை தொடர்ந்தும் நான்காவது இடத்தில் உள்ளதாக ஜேர்மன் வொச் என்ற சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைக்கமைய 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கை அனர்த்த ஆபத்து தொடர்பான பட்டியலில் 98 ஆவது இடத்தில் காணப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இலங்கை 4ஆம் இடம் வரை முன்னோக்கி வந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தான நிலைமை எனவும், நீர் அதிகரிப்பு, வறட்சி, கடும் காற்று மற்றும் கடல் அரிப்பு போன்றவையினால் இலங்கை இந்த இடத்தில் உள்ளதாக நீர்வழங்கல், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்ந்தும் அனர்த்த ஆபத்து குறைந்த நாடாக சிந்தித்து செயற்பட முடியாதென ஜேர்மன் வொச் நிறுவனம் அனர்த்த எச்சரிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts:


நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை - வேலணை பிரதேச...
ஜனாதிபதி தலைமையில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு – பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ...
உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!