ஆதரவு கொடுக்க நாம் பணப்பெட்டிகளை பெற்றுக்கொண்டது கிடையா – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன்!

ஆதரவு கொடுக்க நாம் எக்காலத்திலும் பணப்பெட்டிகளை பெற்றுக்கொண்டது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையி அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
பெறும்பான்மை கட்சிகளுடன் நாம் இணக்கமாக செயற்படுவது பணப்பெட்டிகளை பெற்று எமது நலன்களை அனுபவிப்பதற்காக அல்ல. மாறாக நாம் எமது மக்களின் அபிலாசைகளையே ஆதரவு கொடுப்பதற்காக பிரதுயுபகாரமாக தறுமாறு அவர்களிடம் வலியுறுத்தி வறுகின்றோம்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவு கொடுப்பதற்காக சலுகைகளையும் நிதிகளையுமே பெற்று தமது வங்கிக்கணக்குகளை நிரப்பி வந்துள்ளனர்.
அதுபோலவே இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க தமிழ் தேசிய கூடமைப்பு உறுப்பினர்கள் தலா 300 மில்லியன் நிதியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர அவசரமாக ஆதரவை கொடுத்துள்ளது .
இது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.
எம்மை நோக்கியும் 1000 மில்லியன் நிதி பேரம் பேசப்பட்டது. ஆனாலும் நாம் மக்களின் நலன்களை முன்னிறுத்தி அந்த கில்கையை தூக்கி எறிந்துவிட்டோம்
அந்தவகையில் நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திது செயற்படவெண்டிய தறுணம் தற்போது உருவாகியுள்ளது. வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமக்கு அதிகாரதை தாருங்கள் நாம் உங்கள் நலன்கள் ஒவ்வொன்றையும் செய்து சாதித்துக் காட்டுகின்றோம் என்றார்.
https://m.facebook.com/story.php?story_fbid=270632477164990&id=1632555930352608
Related posts:
|
|