ஆணைக்குழு கலைந்த பின்னர் தனியான பணியகம் அமைக்கப்படும் – மக்ஸ்வெல் பரணகம

Monday, May 2nd, 2016

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை  நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 25 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஞாயிரன்று ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜுன் மாதத்தில் குறித்த குழு கலைக்கப்பட்டால் மீதமுள்ள முறைப்பாடுகள் தொடர்பான கோவைகள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. எனினும் விசாரணைகளை இறுதிப்படுத்துவதற்காக குறுகிய கால பதவி நீடிப்பு வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் இறுதியாக அமர்வு நடத்தப்பட்டதாகவும், அடுத்த அமர்வை எங்கு நடத்துவது என்பது இதேவேளை தமது ஆணைக்குழு கலைக்கப்படுமானால் மீதமுள்ள விசாரணை பணிகள் அடங்கிய கோப்புக்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் எனவும், அவர்கள் மாற்று வழி ஒன்றை கையாள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்படி குழுவை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக காணாமல்போனோர் விவகாரத்தை கையாள்வதற்கு தனிப்பணியகம் ஒன்றை அமைப்பதே அரசின் திட்டமாகவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: