ஆணைக்குழுவில் இருந்து வெளியேற நேரிடும்: மஹிந்த எச்சரிக்கை!

Thursday, May 25th, 2017

தேர்தலை நடத்துவதற்கு தயாராக உள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு மீது  முறையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுமாயின் இந்த ஆணைக்குழுவினை விட்டு நாம் வெளியேற வேண்டிவரும் என தேர்தல்கள் ஆனைணக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலை எப்போது, எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்றமும், நீதிமன்றமுமே தீர்மானிக்கவேண்டும் என்பதுடன் ஆளுந்தரப்பினருக்கே மேற்படி பொறுப்பும் உள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எம்மால் நிறைவுசெய்யப்பட்டு தயார்நிலையில் இருக்கின்றன. ஆனால் தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதைவிடுத்து எமது ஆணைக்குழுதான் தேர்தலை நடத்தவேண்டுமென எவரேனும் நிர்ப்பந்தித்தால் நாம் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: