ஆணைக்குழுமுன் ஜனாதிபதி இன்று சாட்சி பதிவு!

Friday, September 20th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்றையதினம், ஏப்ரல்21 பயங்கரவாத தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ளவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் அந்த குழு அங்கிருந்து ஜனாதிபதியிடம் சாட்சிப் பதிவினை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த கால சாட்சிப் பதிவுகளை நாடாளுமன்றத் கட்டிடத்தொகுதியில் அதற்காக அமைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டிருந்தது. அதேநேரம் ஜனாதிபதி சாட்சி வழங்குவதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது என்று, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி தெரிவித்துள்ளார்.

Related posts: