ஆடை உற்பத்தி தொழில் மூலம் 8 மாதங்களில் 128 மிலியன் வருமானம்!

Sunday, December 31st, 2017

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் வரையில் ஆடை உற்பத்தி மற்0றும் நெசவுத் தொழில் மூலம் பெறப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வருமானம் பற்றி வெளியிட்டப்பட்ட நிதி அறிக்கைகளுக்கு ஏற்ப இத்தொழில் துறைகள் மூலம் 2017 ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையான எட்டு மாதங்களில் 128 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கைத்தொழில் மற்றும்  வணிக விவகாரங்கள் அமைச்சர்  ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள தகவலில், கடந்த இரண்டு வருடங்களாக ஆடை உற்பத்தி மற்றும் நெசவுத் தொழில் மூலம் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது 2017 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரை ஈட்டப்பட்டுள்ள வருமானம் பற்றிய இடைக்கால அறிக்கைகளுக்கு ஏற்ப  அந்த எட்டு மாதங்களில் மட்டும் 128 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. அதே வேளை, இத்தொழில் துறைகளுக்காக இளைஞர்கள், யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் செயற்பாடுகளுக்காக சுமார் 68 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆடை உற்பத்தி மற்றும் நெசவு தொழிற்றுறைகளில் பயிற்சி செலவீனமும் பணியாளர்களுக்கான தேவையும வெற்றிடங்களும் அதிகரித்துள்ளன. இதனாலேயே இத் தொழிற்றுறைகளில் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு அமைச்சு முக்கியத்துவமளித்துள்ளது. இவ்வாறு பயிற்சி பெற்ற புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்வதன் மூலமே இத் தொழிற்றுறைகளை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்

Related posts: