ஆடைகளை நியாயமான விலையில் விற்கவும் –  யாழ்ப்பாணம் வணிகர் கழகம்!

Saturday, October 14th, 2017

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருகின்றது. வர்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஆடைகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர். விலைகள் இடத்துக்கிடம் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வர்த்தகர்களும் இலாபம் ஈட்ட முனைகின்றனர். எனினும் அனைத்து தரப்பினரும் ஆடைகளைக் கொள்வனவு செய்யும் வகையில் நியாயமான விலை நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அனைத்து வர்த்தகர்களையும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வணிகர் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

புடைவை நிலைய உரிமையாளர்கள் தனியே இலாபமீட்டுவதை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படக்கூடாது. பொதுமக்களின் நலனிலும் அக்கறை காட்டவேண்டும்.

பண்டிகைக்கால விற்பனையின் போது சாதாரண மக்களும் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு ஏற்றவகையில் உடுபுடைவைகளை விற்பனை செய்ய வேண்டும்.

மாநகரசபையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஆடைகளைக் காட்சிப்படுத்த வேண்டும். தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் காட்சிப்படுத்தலாம். மக்கள் அலைச்சல் இன்றி இலகுவாக ஆடைகளைத் தெரிவு செய்யும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்த வேண்டும்.

ஆடைகள் அனைவருக்கும் நியாய விலைகளில் கிடைப்பதை வர்த்தகர்கள் உறுதி செய்ய வேண்டும். உரிய நடைமுறைகளைக் கடைப்படித்து அனைத்து மக்களும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட அனைத்து வர்த்தகர்களும் உதவ வேண்டும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: