ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கு நேர்முகப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

Friday, March 9th, 2018

தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு 2017 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடசாலைகளுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13,14,15,16 ஆம் திகதிகளிலும்,சங்கீதம் மற்றும் நடன பாடங்களுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறும் என கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அறிவித்துள்ளார்

Related posts: