ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!

கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறில்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார்.
பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் வறிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்த ஆசிரியர் கற்றலினை நிறைவுசெய்த நிலையிலும் அவர்கள் இன்றும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் தங்களுடைய ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னதாக அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அது பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறுகின்ற வயதெல்லை மாற்றப்பட்டதை அடுத்து பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளதனால் பாடசாலைகளில் பாரிய அளவில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தளம்பல் நிலையினை சீர்செய்வதற்கு கல்வியியல் கல்லூரியின் ஆசிரியர்களுடைய நியமனத்தினை விரைவாக வழங்க வேண்டும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|