ஆசிரிய நிர்வாகசேவையில்  1500 வெற்றிடங்கள்

Thursday, May 11th, 2017

கஷ்ட,அதிகஷ்டப் பகுதிகளில் கல்வி நிர்வாகசேவையில் 1500 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்தவெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சு எவ்விதமான நடவடிக்கைகளையும் இது வரையில் மேற்கொள்ளவில்லையென்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்தபெர்னாந்து தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் ஆசிரியர் நிர்வாக சேவையின் வரையறுக்கப்பட்ட திறந்தமற்றும் சிரேஷ்ட நிலை என நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்ட போதிலும் இதுரையில் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு, ஊவா, வடமத்தி, கிழக்கு போன்ற மாகாணங்களில் கல்வி நிர்வாகசேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில, இம் மாகாணங்களின் கல்விச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: