ஆசிரிய உதவியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை!
Monday, May 22nd, 2017ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் இந்த மாதத்திற்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லையென தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்
தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது
இந்த நிலையில், குறித்த கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அண்மையில் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிறிஷ்ணன் அறிவித்திருந்தார்
எனினும் இதுவரையில் அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்
Related posts:
பாரிய மண்சரிவு: 134 பேர் புதையுண்டதாக அச்சம்?
இலங்கையின் 455 ஆவது பொலிஸ் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு!
அதிபர்களின் சேவைக்காலம் 8 வருடம் : கல்விச் சேவைகள் குழு தீர்மானம்!
|
|