ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை!

Thursday, November 22nd, 2018

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வடமாகாண கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வலயக் கல்வி பணிமனையிலும் மாகாண கல்வி திணைக்களத்தின் www.edudept.np.gov.lk  எனும் இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

பூரணப்படுத்திய விண்ணப்பங்களை வலயக்கல்வி பணிப்பாளரூடாக எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வடமாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.

Related posts: