ஆசிரியர் வெற்றிடங்களை பாடசாலை மட்டத்தில் நிரப்ப நடவடிக்கை -பிரதமர்!

ஆசிரியர் வெற்றிடங்களை பாடசாலை மட்டத்தில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்கள் தேசிய மட்டத்திலோ அல்லது மாகாண மட்டத்திலோ மேற்கொள்ளப்படாது.
பாடசாலைகளில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் நியமனங்கள் வழங்கப்படும். பாடசாலை மட்டத்தில் ஏற்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவை நிரப்பப்படும்.
பாடசாலை பரிசோதனை சபை முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகுப்புக்கள் தெடர்பிலும் இந்த சபையின் ஊடாக அறிக்கை பெற்றுக் கொண்டு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திறமையற்ற அதிபர்களை நியமித்தால் அதற்கான பொறுப்பினை கல்வி அமைச்சரும் மாகாண கல்வி அமைச்சரும் ஏற்றுக்கொள்ள நேரிடும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|