ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

Sunday, April 8th, 2018

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பௌதீகவியல், இரசாயனவியல், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு 399 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்தப் பாட நெறிகள் மாணவர்களின் அறிவியல் சார்ந்தமை என்பதால் இதற்கு வேறு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களைக் கூட பதிலீடாக பாடசாலைகளில் நியமிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ஆகவே இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைவாக 399 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. ஆளுநரின் அனுமதியின் பின்னர் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: