ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண புதிய முறை!

தற்பொழுது நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வு முயற்சியாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரியர்கள் புதிதாக ஆசிரியர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பும் வரையில் சேவையாற்றுவர். இதற்காக, 60 வயதாகி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லுாரிகளுக்கு இணைத்துக் கொள்வதற்கு புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 வீதமானவர்கள் மாவட்ட மட்டத்திலும், ஏனைய 50 வீதமானவர்கள் பிரதேச செயலக மட்டத்திலும் உள்வாங்கப்படவுள்ளதாகவும் குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|