ஆசிரியர் நியமனங்கள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியும்  – இராஜாங்க கல்வி அமைச்சர் !

Monday, October 17th, 2016

நியமனம் பெற்ற தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகள் தாங்கள் வசிக்கும் மாகாணத்துக்கோ அல்லது மாவட்டத்திற்கோ நியமனங்களை மாற்றித் தருமாறு மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கல்விபயின்ற டிப்ளோமா பட்டதாரிகள 3 ஆயிரத்து 225 பேருக்கான நியமனங்கள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் அலரிமாளிகை கேட்போர் கூட மண்டபத்தில் கடந்த 4ஆம் திகதி வழங்கப்பட்டன. அதில் கல்வி இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.

அவர் தெரிவித்ததாவது:

தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளின் நியமனங்கள் தாங்கள் வசிப்பிடமாகக் பொண்ட மாகாணத்தையோ அல்லது மாவட்டத்தையோ கொண்டிராத நிலை ஏற்பட்டிருந்தது. நியமனம பெற்ற தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமா பட்டதாரிகள் தாங்கள் வசிக்கும் மாகாணத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ நியமனங்களை மாற்றித் தருமாறு கல்வி அமைச்சுக்கு முறையிட்டுள்ளனர். கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கள் நியமனங்களை தங்களின் மாகாணத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ ஆசிரியர் தேவைக்கேற்ப மாற்ற முடியும். தாங்கள் வசிக்கும் மாகாணங்களில் உள்ள மாகாணக் கல்வி திணைக்களத்தின் மாகாணக் கல்வி பணிப்பாளரை நாளை திங்கள் மற்றும் செவ்வாய், ஆகிய தினங்களில் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம். அல்லது கல்வி அமைச்சின் கல்வியியற் கல்லூரி ஆணையாளரை சந்திக்கலாம் – என்றார்.

429157955rada

Related posts: