ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பு!

Wednesday, February 26th, 2020

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று (26) ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனந் என  ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக நீடிக்கும் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்க, தற்போதைய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாகவே இந்த அடையாள பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் 30 ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts: