ஆசிரியர் சேவைக்குள் 592 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைப்பு!

Friday, June 7th, 2019

நாடு முழுவதும் தேசிய படசாலைகளில் அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய 592 பேர் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2013, 2018 ஆம் ஆண்டுகளில் பட்டதாரிகளை அரசாங்க வேலைத்திட்டங்களில் இணைத்துக்கொள்ளும் செயற்றிட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகளில் மேற்படி பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றுவோர் ஆசிரிய சேவைக்குள் இணைந்து கொள்ள விரும்பினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சு கடந்த வருடம் விண்ணப்பங்களை கோரியிருந்ததது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தேசிய பாடசாலைகளில் கடமையாற்றிய அபிவிருத்தி உதவியாளர்கள் அவர்களது பட்டப்பாடங்களுக்கேற்ப வெற்றிடமுள்ள பாடங்களுக்கு தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கடந்த வாரம் அலரி மாளிகையில் பிரதமரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: