ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கட்டாக்காலி நாய்கள் கொலை: குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ...
இலங்கையின் துறைமுகத்திற்கு 25 ஆவது இடம்!
எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை - அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
|
|