ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Tuesday, September 7th, 20212020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஒன்பதாம் திகதி நள்ளிரவுமுதல் தொடருந்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்!
கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு - தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு...
அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயார் - பொருளாதாரத்தைச் சீர்செய்ய மக்கள் விரும்பாத த...
|
|