ஆசிரியர் ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு …!

Thursday, April 25th, 2024

2023 (2024) தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3-1 (அ) தரத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 2ஆம்  திகதி நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகளின்படி, ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
000

Related posts: