ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை!

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் – அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தொடர்பில் அவதானிப்புக்களை முன்வைப்பதற்கு முன்னதாக, கல்வி அமைச்சு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, இன்று அல்லது நாளை கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஹெரோயினுடன் கைதான ஈரானியர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!
பிரதமரது செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களுக்கு திங்கள்முதல் வீட்டு தனிமைப்படுத்தல் முறைமையில் சிகிச்சை -...
|
|