ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு நிதியமைச்சருடன் சந்திப்பு!

Saturday, August 21st, 2021

ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.

வேதன முரண்பாட்டிற்கு தீர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்களை தனித்தனியாக குறித்த அமைச்சரவை உபகுழு கடந்த நாட்களில் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

இந்தநிலையில் நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளரும் பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இது தொடர்பான யோசனைகளை அமைச்சரவை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் யோசனைகள் முன்வைக்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: