ஆசிரியர்கள் விதிகளை மீறாமல் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் : பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை!

Thursday, October 7th, 2021

தனிமைப்படுத்தல் விதிகளை மீறாமல் ஆசிரியர்கள் தமது கோரிக்கைகள் வெற்றி பெறச் செய்யுமாறு ஆசிரியர் சங்கங்களை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிகளுக்கு எதிரான போராட்டங் களால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட கொவிட் வைரஸ் மீண்டும் தோன்றி 5 ஆவது அலையாக உருவாகக்கூடும் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் மீண்டும் பரவினால், நாடு மீண்டும் பூட்டப்பட வேண்டியிருக்கும். இதன் விளைவாக நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கடுமையான பிரச்சினை எழும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை கொவிட் தொற்றால் நீண்டகாலமாக பூட்டப்பட்டிருக்கும் பாடசாலைகளைத் திறக்க வேண்டும், மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்கப்பட வேண்டும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உறுதியான பதிலை வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: