ஆசிரியர்கள் மூலம் முதலாவது டெல்டா கொத்தணி உருவாகும் ஆபத்து – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

மக்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய பாதுகாப்பாக செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்படவில்லை என்றால் எதிர்வரும் வாரங்களில் டெல்டா வைரஸ் பரவல் பாரியளவில் அதிகரிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடியான நிலையில் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆசிரியர்களில் அதிகமானோரின் உடலில் கொவிட் வைரஸ் தொற்றிக்கு எதிராக போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர்கள் பாரிய அவதானமிக்க நிலைமையிலேயே உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா மாறுபாடு நாட்டில் பரவும் இந்த சந்தர்ப்பத்தில் 3, 4 வாரங்களுக்குள் ஆசிரியர் டெல்டா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய இலங்கையின் முதலாவது டெல்டா கொத்தணி ஆசிரியர்களிடம் இருந்தே ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|