“ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு ” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்றையதினம் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தன
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு, உரப் பிரச்சினை, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் நேற்றையதினம் விரிவாகப் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்ட அவர் ஆசிரியர்கள் இன்றையதினம் கடமைக்குத் திரும்புவார்கள் எனவும் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் மற்றும் உரப்பிரச்சினைக்கு கிரமமாகத் தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|