ஆசிரியரின் வீட்டில் திருடிய யாழின் பிரபல பாடசாலை மாணவர்கள் கைது!
Thursday, December 27th, 2018ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஆசிரியர் மாணவர்களில் ஒருவருக்கு கற்பித்துள்ளார். ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று வந்த மாணவன் அந்த வீட்டில் இருந்த மடிக்கணினி மற்றும் தொலைபேசி, காசு உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களை பல தடவைகள் திருடி வந்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் வங்கி ஏ.ரி.எம்.அட்டையை திருடிச் சென்றதுடன் பூட் சிற்றி ஒன்றில் பொருட்கள் கொள்வனவும் செய்துள்ளார். அதேநேரம் ஏ.ரி.எம் அட்டை திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த மாணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் யாழ் நகரில் உள்ள விருந்தினர் விடுதிக்கு சென்றதை அறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார் அவர்களைப் பின் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று அவர்களது வீட்டில் வைத்து நால்வரையும் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|