ஆசிரியரின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவர்கள் கறுப்புக் பட்டிப் போராட்டம்

வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தொண்டமானாறு வீரகத்திப் பிள்ளை மாகா வித்தியாலயத்தின் மாணவர்கள் கறுப்புப் பட்டி அணிந்த பாடசாலையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஏற்கனவே இந்தப் பாடசாலையில் கற்பிக்க விருப்பமின்றி மாற்றம் வாங்கிச் சென்றவரும் தற்போது உடுபிட்டி மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் மீண்டும் அந்தப் பாடசாலைக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்துமே பாடசாலை மாணவர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு பாடசாலை சமூகம் என உரிமை கோரப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் பாடசாலை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. வரும் முன் காப்போம் என்று தலைப்பிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் இன்று பாடசாலைக்குப் புதிதாக வருகை தரவிருக்கும் ஆசிரியரை நிராகரிப்போம். துடிப்பும் வேகமும் நிறைந்த ஆசிரியர் தேவை.
தற்போது எமது பாடசாலை தேசிய மட்ட போட்டியில் கால்பதித்து வருகின்ற நிலையில் இடமாற்றம் மேற்கொள்வது விளையாட்டுத் துறையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும். புதிதாகக் கடமையைப் பொறுப்பேற்கவுள்ள ஆசிரியர் கடந்த காலத்தில் எமது பாடசாலையில் கல்வி கற்பித்துப் பாடசாலைக்குச் சமூகத்துடன் முரண்பட்டுச் சென்றவர் இந்நிலையில் எமது பாடசாலையில் மீண்டும் இடமாற்றம் வழங்குவது ஏற்றுக்கொள்வது முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு வடமராட்சி கோட்டக்கல்வி ப்பிணப்பாளர் இது தொடர்பில் ஒரு வாரத்திற்கள் தீர்வு வழங்கப்பட்டு எனத் தெரிவித்தார். அதனை அடுத்து மாணவர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
Related posts:
|
|