ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – பொருளாதார மற்றும் அரச நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Friday, October 28th, 2022

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் பாம்பலா பெம்பலொனிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மற்றும் அரச நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: