ஆசிய பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை உருவாகும் – பிரதமர்

Monday, November 6th, 2017

ஹம்பாந்தோட்டத் துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பனவற்றின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு ஆசிய பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இவ்வாறு உரையாற்றுகையில், நாட்டுக்குச் சுமையாகக் காணப்பட்ட ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுடன் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சியாக மாற்றப்பட்டிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் பாரிய அளவிலான நிறுவனம் ஒன்று இதில் இணைந்துள்ளமையினால் கூடுதலான கப்பல்கள் இலங்கைக்கு வரும் என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த காலத்தில் பியகம நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டதைப் போன்று ஹம்பாந்தோட்டை நகரமும் அபிவிருத்தி செய்யப்படும் என்று பிரதமர் கூறினார்.

Related posts: