ஆசிய பிராந்திய பேரவை 300 மில்லியன் டொலர் நிதி உதவி!

Tuesday, August 7th, 2018

பாதுகாப்பு உறவு அடிப்படையில் இலங்கைக்கு நிதியுதவி அளிக்க முடியும் என்று ஆசிய பிராந்திய பேரவை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமது உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 300 மில்லியன் டொலர்களை பாதுகாப்பு உறவு விருத்திக்காக நாடுகளுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதன்கீழ் கடல் பாதுகாப்பு, அமைதி காப்பு பணிகள், போதைவஸ்து ஒழிப்பு போன்றவற்றுக்கு நிதியை வழங்க முடியும் என்றும் ஆசிய பிராந்திய பேரவை குறிப்பிட்டுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆசிய பிராந்திய பேரவை 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: