ஆசிய கிண்ணதத் தொடர்: இலங்கை தேசிய அணியில் மத்திய கல்லூரி மாணவன் மதுஷன்!

Saturday, September 22nd, 2018

வங்கதேசத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த மதுசன், உடற்தகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாகவே அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை என்றும் பின்னர் உடற்றகுதிச் சோதனையில் வெற்றி கண்டார் என்றும் கூறப்பட்ட நிலையிலேயே தற்போது குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்களில் காணப்படுகின்றார்.

வீரர்கள் குழாம்:

 1. நிபுன் தனஞ்சய (அணித்தலைவர்)
 2. செல்வராசா மதுசன்
 3. பசிந்து சூரியபண்டார
 4. நவோத் பரணவிதான
 5. கமில் மிஷர
 6. நிஷான் மதுஷ்க
 7. டுனித் வெல்லலகே
 8. சசிக டுல்ஷான்
 9. கல்ஹர சேனாரத்ன
 10. றொஷான் சஞ்சய
 11. சதுன் மென்டிஸ்
 12. கலன பெரேரா
 13. நிபுன் மலிங்க
 14. நவீன் பெர்ணான்டோ

தயார் நிலை வீரர்கள்:

 1. விஜயகாந்த் வியாஸ்காந்த்
 2. லக்ஷித மடரசிங்கே
 3. முடித லக்ஷன்
 4. சிலான் கலிந்து
 5. சாமிக குணசேகர

Related posts: