ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்பு!

Saturday, September 24th, 2022

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது மாநாட்டில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் 30ஆம் திகதி வரை இந்த மாநாடு இலங்கையின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, நாட்டின் பொருளாதார மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ளது.

2016 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய நிதியமைச்சர் பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளார்.

இதனிடையே

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட விரிவான நிதி வசதிக்கு இந்த வருட இறுதிக்குள், அங்கீகாரம் வழங்கப்படும் என நம்பப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.

ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: