ஆசியாவியாவின் தலை சிறந்த ஆலயமாக கோணேஸ்வர ஆலயத்தை மேம்படுத்த முயற்சி!

Tuesday, January 30th, 2018

ஆசியாவின் தலை சிறந்த ஆலயமாக திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் புதுடில்லி முதலீட்டாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.

இக்குழுவினர் சனிக்கிழமை விஷேட விமானம் மூலம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு இதுகுறித்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகமவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இவர்கள்  கோணேஸ்வர ஆலயத்தில் யாத்திரிகர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் திருகோணமலையில்சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களையும் பார்வையிட்டனர். திருக்கோணேஸ்வரா ஆலயத்தில் விஷேட வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

Related posts: