ஆசியாவின் சாம்பியன்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு – வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு 2 மில்லியன் நிதியும் வழங்கிவைப்பு!

Saturday, September 17th, 2022

வெற்றி பெற்ற இலங்கை அணியின் ஒவ்வொரு வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கும் தலா 20 இலட்சம் ரூபா இலங்கை கிரிக்கெட் மூலம் வழங்கப்படவுள்ளது.

மேலும், பொதுலநலவாயப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு 10 மில்லியன், வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு 5 மில்லியன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தேசிய விளையாட்டு நிதியில் இருந்து 25% வழங்கப்படவுள்ளது.

அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாக 500,000 அமெரிக்க டொலர் காசோலையையும் இலங்கை கிரிக்கெட் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.

கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் பொதுநலவாய விளையாட்டுகளில் ஆசியாவின் சம்பியன்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஜனாதிபதியின் அனுசரணையில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: