ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, April 11th, 2018

வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் 99 காணப்படுகின்றது. குறித்த ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தரத்திலானவர்கள் உள்வாங்கப்படவுள்ளார்கள்.

இதற்கான விண்ணப்பங்கள் ஆளுநரின் அனுமதியின் பின்னர் கோரப்படவுள்ளன. இது தவிர ஆங்கில ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: