ஆங்கில பாடத்தில் 51 வீதமான மாணவர்களே சித்தி!

Sunday, April 8th, 2018

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆங்கில பாடத்தில் 51 வீதமானவர்களே சித்தியடைந்துள்ளனர்.

குறித்த தகவலை பரீட்சை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கோள்காட்டி அரசாங்க இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை சித்திகளின்படி 2 லட்சத்து 96 ஆயிரத்து 157 மாணவர்கள் ஆங்கிலப் பரீட்சைக்கு தோற்றினர். அவர்களுள், 31 ஆயிரத்து 619 பேர், ஏசித்தியையும், 39 ஆயிரத்து 717 பேர், பி சித்தியையும், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 393 பேர், எஸ் சித்தியையும் பெற்றுள்ளனர்.

ஏனைய முக்கிய பாடங்களில் பெற்ற சித்திகளுடன் ஒப்பிடும் போது இது குறைந்த மட்ட சித்தியாகும்.

எனினும், கடந்த 2016 ஆம் ஆண்டு 47 சதவீதமானோரே ஆங்கில பாடத்தில் சித்திபெற்றிருந்தனர். 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சித்தியடைந்தோர் வீதம் அதிகமாகும் எனமதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: