ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள்

Sunday, November 19th, 2017

வடக்குமாகாணத்தில் தற்போது ஆங்கிலமொழியை அடிப்படையாகக் கொண்ட தனியார் முன்பள்ளிகள் அதிகரித்துள்ளன. அவற்றின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் இவ்வாறு வடக்குமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வடக்குமாகாண ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு வடக்குமாகாண முன்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் சரியான ஒரு நிலைப்பாட்டை உண்டாக்க வழிவகைகள் செய்யவேண்டும்.

இவ்வாறு வடக்கு மாகாண முன்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் சரியான ஒரு நிலைப்பாட்டை உண்டாக்க வழிவகைகள் செய்யவேண்டும். இவ்வாறு வடக்குமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வடக்குமாகாண ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டதாவது;

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், தேவைகளை நிறைவு செய்து கொள்ளுவதற்கும் 2016 ஆம் ஆண்டில் வடக்குமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

குழந்தைகளின் அடிப்படைக் கல்வியான விளையாட்டுடனான கல்வியை வழங்கி அவர்களுக்கு கல்வியின் ஆரம்பத்தை தொடக்கி வைக்கிறோம். ஆனால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான (எமக்கான) அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. கூட்டுறவுச் சங்கம் மற்றும் சனசமூக நிலையங்களின் நிதிப் பங்களிப்புடன் வலயக்கல்வி அலுவலகத்தின் வழிகாட்டலுடன் முன்பள்ளி கற்றல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. முன்பள்ளிகள் யாவும் வெவ்வேறான நிர்வாகங்களின் கீழ் பொதுவான நடைமுறை இல்லாமல் செயல்படுகின்றன. ஆகவே வடக்குமாகாணத்தில் உள்ள முன்பள்ளிகள் யாவும் பொதுவான ஒரு முறைமையின் கீழ் செயற்பட வேண்டும்.

நாள் முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளிலும் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குகின்றோம். ஆனால் எமது அடிப்படைச்சம்பளம் 3 ஆயிரம் ரூபா. இது தவிர முன்பள்ளி நிர்வாகம் சிறு தொகையைத் தந்தாலும் 6 ஆயிரம் ரூபாவே எமது மாதச் சம்பளமாக உள்ளது. ஆகவே எமக்கான சம்பளம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். இந்தப் பருவத்தில் குழந்தைகள் பார்த்தல், கேட்டல் போன்ற முறைகளில் தான் கற்றுக் கொள்வார்கள். ஆகவே அந்தக் கல்வியை வழங்கும் முன்பள்ளிகளின் கட்டட அமைப்புக்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்ற தேவைகள் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

தாய்மொழியை முன்னிலைப்படுத்தி விளையாட்டு, பாடல், ஆடல் போன்ற முறையில் கல்வியை வழங்க வேண்டும். நாம் அவ்வாறு தான் வழங்குகின்றோம். குழந்தைப் பருவத்தில் ஒரு குறித்த அளவிலேயே கல்வியை வழங்க வேண்டும். ஆனால் தனியார் முன்பள்ளிகள் அவ்வாறில்லை.  ஆகவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பில் முன்பள்ளிகள் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

Related posts: